சுவையான சின்ன வெங்காய ஊறுகாய்!!!

சின்ன வெங்காய ஊறுகாய்

தேவையான  பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 3

புளி – சிறிதளவு

தனியா – 1 டீஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

கருவேப்பிலை – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

onion  க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன்   புளி, காய்ந்த மிளகாய், தனியா, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனை கொரகொரப்பாக அரைத்து எடுக்க  வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை விட்டு  கடுகு , கருவேப்பிலை  தாளித்து, அரைத்து வைத்த விழுதை சேர்த்துக் கிளறி  எண்ணெய்  தெளிய இறக்கினால் சுவையான வெங்காய ஊறுகாய் தயார்!!!