பிருத்வி ஷா அவுட்….. டெல்லி அணி 5 ஓவர் முடிவில் 38/1…..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ஓவர் முடிவில் 38/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.  தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக வியாடிய நிலையில் 24 (16)   தீபக் சாஹர் வீசிய 5வது ஓவரில்  அடிக்க முயற்சித்து  வாட்சன் வசம் பிடிபட்டார்.இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயரும், ஷிகர் தவனுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.