5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை : டெல்லி காவல்துறை உத்தரவு …!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படுமென்று டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக டெல்லி அரசு திரையரங்குகள் , பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது. மக்கள் அதிகளவில் கூடும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதை அமல் படுத்துவதற்காக டெல்லி போலீசார் புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லி போலீஸ் சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் ஐந்து பேருக்கு மேல் எங்கேயும் கூட கூடாது. அதாவது யாரும் 5 பேருக்கு மேல் கூடும் படியான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று டெல்லி போலீஸ் சொல்லி இருக்கிறார்கள்.

ஏதேனும் போராட்டங்கள் மட்டுமல்லாமல் கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இது கொரோனா வைரஸ்ஷை தடுப்பதற்கான நடவடிக்கை என்பதால் பப்ளிக் டிரன்ஸ்போட் என்று சொல்லப்படும் பேருந்துகள், சிறிய ரக கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள். அதே வெளிப்புற அரங்குகளில் மட்டுமல்லாமல் கட்டிடத்திற்குள்ளேயும் 5 பேர் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யக் கூடாது என்று உத்தரவில் சொல்லப்டுள்ளது. இதில் கலைநிகழ்ச்சிகளும் அடங்கும்.

இதற்கு காரணம் என்னவென்றால் டெல்லி அரசின் உத்தரவுப்படி கொரோனா பரவாமல் தடுப்பதற்கு அதிகளவில் மக்கள் கூடுவதற்கு எதிரான நடவடிக்கை என்னெல்லாம் உண்டோஅதுஅனைத்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. திருமணத்துக்கு கூட 50 நபர்களுக்கு மேல் வரக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு மார்ச் 31ஆம் தேதி வரை பொருந்தும்.