டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்,   பெரியார்,   இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவ அமைப்புகள் மீது பிஜேபி மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவித்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ”தேங்க்யூ சிஎம்” என்று மாணவர்கள் தெரிவித்ததை திமுகவின் மாணவர் அணி மாநில தலைவர் ராஜீவ்காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.