டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன் எடுத்துள்ளது…!!

டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் 41 ரன்கள் குவித்துள்ளது .

ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10_ஆக இருந்த போது ப்ரித்வி ஷா 7 ரன்கள் எடுத்து மிட்செல் மக்க்லேனகான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவிலை. 10 பந்துகளை சந்தித்த ஷ்ரேயஸ் ஐயர் 16 ரன்கள் எடுத்து மிட்செல் மக்க்லேனகான் பந்தில் ஆட்டமிழந்தார் . டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன் எடுத்துள்ளது . மும்பை அணி சார்பில் மிட்செல் மக்க்லேனகான் 2 விக்கெட் வீழ்த்தினார்.