பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்….. இது ஒரு நல்ல பாடம் – டெல்லி கேப்டன்……!!

Image result for டெல்லி கேப்டன்......!!

இந்நிலையில் தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்  கூறியதாவது:- “நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணத்தோடு மீண்டும் களம் இறங்க வேண்டும். முதல் இடைவேளை நேரத்தின் போது இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள்  வரை குவித்தால் நல்ல இலக்காக இருக்கும்  என்று கருதினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக நாங்கள் ரன்களை மிக குறைவாக எடுத்து விட்டோம். டாப் ஆர்டரில் யாரேனும்  ஒரு வீரர் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி எங்கள் அணிக்கு  ஒரு நல்ல பாடம். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக வீசி நெருக்கடி கொடுத்தது பாராட்டத்தக்கது” என்றார்.