ஷிகர் தவான் அதிரடியில் டெல்லி அணி அபார வெற்றி..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது   

2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் நேற்று  இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதியது. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி  7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்தது.

Seithi Solai

அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 65 (39) ரன்களும்,  கடைசியில் அதிரடியாக விளையாடிய  ஆண்ட்ரே ரஸல் 21 பந்துகளில் 45 ரன்கள்  (4 சிக்ஸர், 3 பவுண்டரி) குவித்தனர்.டெல்லி அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ், ககிசோரபாடா, கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி  அணியின் தொடக்க வீரர்களாக பிருத்விஷாவும், ஷிகர் தவானும்  களமிறங்கினர். பிருத்விஷா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து வந்த ரிசப் பன்ட்டும்,  ஷிகர் தவானும் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி சென்றனர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பன்ட் 46 (31) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கடைசி வரை விளையாடிய ஷிகர் தவான் 97* (63) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

தவானுடன் கோலின் இங்ரம் 14* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 18.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து  180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் பிரசித் கிருஸ்னா, ஆண்ட்ரே ரஸல், நித்திஷ் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி இந்த வெற்றி மூலம்  புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.