அரைசதம் விளாசிய பிருத்வி ஷா…….டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓவர் முடிவில்140/2……!!

பிருத்விஷாவின் அரை சதத்தால்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 140/2 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

12 ஐ.பி.எல் திருவிழாவின் 10-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டிடெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்  இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக  ஆண்ட்ரே ரஸெல் அதிரடியாக விளையாடி  28 பந்துகளில் 62 ரன்கள்( 6 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசினார்.  தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து டெல்லி அணி 186 ரன்கள் இலக்கை நோக்கி தொடக்க வீரர்களான ஷிகர் தவானும், பிருத்வி ஷாவும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய தவான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், பிருத்விஷாவும் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை அதிரடியாக எதிர் கொண்டனர். இதையடுத்து பிருத்வி ஷா அரைசதம் விளாசினார். ஷ்ரேயஸ் ஐயரும் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிசப் பன்ட் களமிறங்கினார். பிருத்வி ஷா 70 (41) ரன்களிலும், ரிசப் பன்ட் 8 (9) ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.