இது எப்படி இறந்திருக்கும்….? மானுக்கு நேர்ந்த கொடுமை…. கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்….!!!

மர்மமான முறையில் மான் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே அரசுக்கு சொந்தமான காப்பு காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள ஏரி பகுதிகளில் மான், முயல், காட்டெருமை மற்றும் பல்வேறு வகையான பறவைகள் வசித்து வருகின்றன.

தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அங்கு வசித்து வரும் மான்கள் குடியிருப்பு பகுதி மற்றும் சாலையில் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றி தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்து காப்புக் காட்டில் புதைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *