மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தீபா …

ஜெயலலிதாவின் உறவினராகிய தீபா ரெட்டை இலைக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டு ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் .

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தேன் கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன

இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான கொண்டாட்டமானது அதிகரித்து உள்ளது மேலும் அதிமுக திமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் தங்களுக்கான வலுவான கூட்டணியை சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு தற்பொழுது  கூட்டணிக் கட்சிகள் இணைந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும்  தொகுதி பங்கீடு மூலம் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை நிர்ணயித்து வேட்பு மனுவை அளித்து வருகின்றனர்

தற்பொழுது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார் மேலும் அவர் கூறியதாவது,மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வர்க்கம் இரட்டை இலைக்கும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஏகமனதாக ஆதரவளிப்பதாக அதன் பொதுசெயலாளர் தீபா அவர்கள் தெரிவித்துள்ளார் .

மேலும் ,ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்