காலமானார் – நடிகர் வடிவேல் பாலாஜி..!!

45 வயது ஆன நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு காரணமாக இருக்கைகளும் வாதத்தினால் முடங்கியது. பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு போதிய வசதி இல்லாத காரணத்தினால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 45 வயதான வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *