தெலுங்கு நடிகர் மரணம்…. நடிகை அனுஷ்கா ஆழ்ந்த இரங்கல்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

தெலுங்கு நடிகர் நாகையாவின் மறைவிற்கு முன்னணி நடிகை அனுஷ்கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா.இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் தெலுங்கில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான வேதம் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப் படத்தினை தமிழில் வானம் என்ற பெயரில் எடுத்து வெளியிட்டனர்.

வேதம் படத்தில் நடிகர் நாகையா மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென உயிரிழந்தார். இச்செய்தியைக் கேட்டு அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில், ஒரு நல்ல ஆத்மா என்று சொர்க்கத்திற்கு சென்று விட்டது. நாகையா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். துக்கத்தின் இந்த நேரத்தில் கடவுள் அவர்களை ஆசீர்வதித்து ஆறுதல் அடைய செய்யட்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நாகையாவின் மறைவினால் தெலுங்கு திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

https://www.instagram.com/p/CM7Rq3FDUvW/