”முன்னாள் அமைச்சர் தீடிர் மரணம்” அதிர்ச்சியில் கட்சியினர் …!! 

திமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 

1996_ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜெனிபர் சந்திரன். இவர் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பின்னர் 2004_ஆம் ஆண்டு இவர் அதிமுகவில் இணைந்த்தார்.

அதிமுகவில் மாநில மீனவர் அணியின் இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் ,தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2010_ஆம் ஆண்டு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரன் விடுவிக்கப்படடர். உடல்நலக்குறைவினால் மதுரையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.