”முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணம்” மோடி இரங்கல் …!!

டெல்லி முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார்.  இன்று உடல்நலக்குறைவால் ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Image

இந்நிலையில் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் ,  ஷீலா தீட்சித் டெல்லியின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.