“டியர் விக்ரம்”… ப்ளீஸ் பதிலளியுங்கள்… வேடிக்கையாக பதிவிட்ட நாக்பூர் காவல்துறை.!!

 

நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம்  விதிக்கமாட்டோம்’ என்று நாக்பூர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2 திட்டப்படி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறங்கியது.  லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால்  இஸ்ரோ மையமே நிசப்தமானது. அதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு மேற்கொள்ளப்போவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் நிலவிலிருந்து பல தகவல்கள் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.

Image result for vikram-lander-location-discovery

இதையடுத்து நேற்று விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை.  ஆகவே தகவல் தொடர்புக்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதற்காக ஆர்பிட்டரை நிலவுக்கு அருகில் கொண்டு செல்லும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for vikram-lander-location-discovery

இந்நிலையில் நாக்பூர் காவல்துறை சார்பில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிடப்பட்டிருந்தது. அதில், டியர் விக்ரம், ப்ளீஸ்  பதிலளியுங்கள். ”நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம் எதுவும் விதிக்கமாட்டோம்’ என்று வேடிக்கையாக பதிவிடப்பட்டிருந்தது.