ஐயோ இவருக்கு என்னாச்சு…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஓடையில் அடையாளம் தெரியாத ஆணின் பிணம் மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் உள்ள ஓடையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அப்பகுதி கிராம நிர்வாகியான ருத்திர செல்வனிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதுகுறித்து தாளவாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஓடையில் இறந்து கிடந்த ஆண் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், அவர் இறந்து கிடந்ததற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.