டேவிஸ் கோப்பை டென்னிஸ் : பின்லாந்திடன் இந்திய அணி தோல்வி ….!!!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது .

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பின்லாந்தில் எஸ்போ நகரில் நடந்து வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் இந்தியா-பின்லாந்து அணிகள் மோதின. இதில் முதல் நாளில் நடைபெற்ற ஒற்றையர் சுற்று ஆட்டங்களில் இந்தியாவை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் இருவரும் தோல்வியடைந்தது. இதையடுத்து நேற்று நடந்த இரட்டையர் பிரிவி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி பின்லாந்தின் ஹாரி ஹெலிவாரா – ஹென்றி கோன்டினென் ஜோடியை எதிர்கொண்டது .

ஆனால் 6-7 (2-7), 6-7 (2-7) என்ற செட் கணக்கில் போபண்ணா-ராம்குமார் ஜோடி போராடி தோல்வியடைந்தது. இதையடுத்து நடந்த மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-3, 7-5  என்ற செட் கணக்கில் பின்லாந்தின் பாட்ரிக் நிக்லாசை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றார். இறுதியாக 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்ததால் இனி அடுத்த ஆண்டு பிளே ஆப் சுற்றில் விளையாடும்  நிலைக்கு தள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *