டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம்…. ஐதராபாத் அணி 181 ரன் குவிப்பு…!!

டேவிட் வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்துள்ளது. 

இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி அதிரடியாக ஆடினர் . பேர்ஸ்டோ 39 (35) ரன்களில் பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் கிளீன் போல்டனார். இதையடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 85 (53) ,  ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விஜய் சங்கர் அதிரடியை  வெளிப்படுத்த சன்ரைசர்ஸ் அணி ரன் வேகம் அதிகரித்தது. இறுதியாக ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது . விஜய் சங்கர் 40 (24) குவித்தார். கொல்கத்தா அணி சார்பில் ஆன்ட்ரெ ரஸ்ஷெஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.