மகள் இறந்த துக்கம்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பெருமாள்பட்டியில் விவசாயியான முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வக்கனி என்ற மனைவியும், கலையரசி என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலையரசி உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் முருகானந்தம் மிகவும் மனமுடைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனாலும் மனமுடைந்த முருகானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *