“கொரோனா ஊரடங்கு” தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டின் பருவத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான பருவத்தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்தப் பருவத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய சிறப்பு வாய்ப்பு ஒன்றை பல்கலைக்கழகம் அளித்துள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆம் தேதி என அறிவித்த நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையின் காரணமாக கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடித்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்தது.

ஆனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *