ஃபேஸ்புக்கில் டார்க் மோட் வசதி – களமிறங்கிய ஃபேஸ்புக் நிறுவனம்..!!!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வசதி வழங்கும்  பணிகளில் களமிறங்கியுள்ளது.

 

ஃபேஸ்புக் நிறுவனமானது  2019 எஃப்8 நிகழ்வில் பல புதிய அம்சங்கள் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தற்போது ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் என்ற பெயரில் எஃப்.பி.5  அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்தது.
அவ்வகையில் புதிதாக டார்க் மோட் வசதியை தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவருவதற்கான பணிகளில்  ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அம்சமானது மொபைல் தளத்தில் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுவருகிறது.
Image result for facebook Dark Mode
இந்நிலையில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் சில பகுதிகளில் மட்டுமே டார்க் மோட் சீராக காட்சியளிக்கின்றது. இதன் மூலம் டார்க் மோட் முழுவதுமாக  தயாராகவில்லை என்று அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் வரும் வாரங்களில்  இந்த அம்சமானது முழுமையாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளின் பெயர்களில் புதிய ஃபேஸ்புக் பிராண்டிங்கை சேர்த்து Instagram from Facebook, மற்றும்  WhatsApp from Facebook என்று மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *