அடடே! ரம்யா பாண்டியனா இது…. ஆளே மாறிட்டாங்களே…. எப்படி இருக்காங்க பாருங்க…!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். ஆனால் தற்போது கவர்ச்சி புகைப்படத்திற்கு பதிலாக பாவாடை தாவணியில் ட்ரெடிஷனலாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வழக்கத்தை விட அதிகமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் எப்போதுமே கவர்ச்சியான உடைகள் அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் பாண்டியன் தற்போது டிரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.