அடடே…! என்னா சூப்பரா இருக்கு…. வீடியோ போட்ட மத்திய அரசு…. தெறிக்கவிடும் புதிய நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் காட்சியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்று. தற்போது இருக்கும் நாடாளுமன்றம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை விட 17 ஆயிரம் சதுர மீட்டர் பெரிதாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி, வரும் 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால்  அது திறந்து வைக்கப்பட உள்ளன. இதனை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள்  அறிவித்திருக்கின்றனர்.

இச்சூழலில் நாடாளுமன்றத்தில் புதிய கட்டடத்தின் புதிய காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன. டெல்லியில் எந்த ஒரு புதிய அரசு கட்டிடமும் இந்தியா கேட்டை விட உயரமாக இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நாடாளுமன்ற கட்டிடம் அமைக்க பட்டது. இது நான்கு தளங்களை கொண்டதாக இருக்கிறது. இதில் மக்களவையும்,  மாநிலங்களவையும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கின்றன.

971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. 1272 உறுப்பினர்கள் வரையில் அமரும் விதமாக இந்த நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடம் அமைந்திருக்கிறது. மக்களவையில் 888 பேர் வரை அமரலாம். மாநிலங்களவையில் 384 பேர் வரை அமரலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடியதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புதிய காட்சிகளை தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்த நாடாளுமன்றத்தின் தூண்கள், சுவர்கள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் கலாச்சாரம் – பொருளாதார -கலை மற்றும் கட்டுமான நுணுக்கங்களுடன் மேற்கொள்ள இருப்பதாக ஆரம்பத்திலேயே தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடாளுமன்றத்தின் காட்சிகள் வெளியாகி உள்ளன. காத்திருப்பறை, ஆலோசனை அறை, பிரதமரின் அறை  , ஓய்வறை என்று பல பகுதிகளில் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

https://twitter.com/ANI/status/1662054692552327169

Leave a Reply