அடடே!…. சீரியல் பிரபலங்கள் தீபக்- அபிநவ்யா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு…. இன்ஸ்டாவில் கியூட் போட்டோ….‌ குவியும் வாழ்த்து….!!!!!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் தீபக். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அபிநவ்யா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு சமீபத்தில் அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தீபக் மற்றும் அபிநவ்யா தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகர் தீபக் புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தை புகைப்படம் மற்றும் மருத்துவமனையில் மனைவி இருக்கும் புகைப்படத்தை தீபக் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Deepak kumar (@d_chinky)

 

Leave a Reply