அடடா….. கர்ப்பகாலத்தில் குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை…..!!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். இவர் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இவருக்கு 2015 ஆம் ஆண்டு திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கும் போது நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் ”நான் ஒரு நடன கலைஞராக இருப்பதால் கர்ப்பமாக இருந்த போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது” அவர் கூறியுள்ளார். மேலும், ”பெண்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருந்தார். இவர் கர்ப்ப காலத்தில் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *