அடடே! படையப்பா படத்திற்கு பிறகு…. சூப்பர் ஸ்டாரை காண படையெடுக்கும் மக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல கண்டன நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஷூட்டிங் காண அனுமதி வழங்கப்படாததால் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் நடிகர் ரஜினிகாந்தை காண்பதற்காக ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு படையெடுத்து செல்கின்றனர். மேலும் படையப்பா படத்திற்கு பிறகு ரஜினியை காண்பதற்கு இப்படி ஒரு கூட்டம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ன்