அணை பாதுகாப்பு மசோதா… எதிர் குரல் அதிமுக MPக்கள் மூலம் ஒலிக்கும்… முதல்வர் பேட்டி…!!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து  அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு க ஸ்டாலின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், அதை தமிழகம் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று பேசிய அவர்,

அணை பாதுகாப்பு மசோதாவிற்கு  எதிராக கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டுவருமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் சேலத்தில் சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே கூறியபடி அனைத்து மாநிலங்களும் அணை பாதுகாப்பு மசோதாவை ஏற்கும் வரை இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான நடைமுறைகள்  வார்டு மறுவரையறைக்கான பணிகள் முடிந்த பின் தொடங்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் கட்டாயமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.