உடையும் நிலையில் அணை… 1500 ஏக்கர் நாசமாகும் அபாயம்… வேதனையில் விவசாயிகள்..!!

திருச்சி லால்குடி அருகே உடையும் நிலையில் உள்ள பங்குனி அணைக்கட்டை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் பங்குனி அணைக்கட்டு காவிரி ஆற்றில் இருந்து வரும் நீர் மற்றும் உபரி நீரால் நிரம்புகிறது. சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் பங்குனி அணை கட்டு, தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

Image result for பங்குனி அணைக்கட்டு

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அணை உடைந்தால் நீர் முழுவதும் வீணாகி விடும் என வருந்தும் விவசாயிகள் அணை கட்ட நிதி ஒதுக்கக் கோரி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் விரைந்து அணையை புதுப்பிக்க  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Image result for பங்குனி அணைக்கட்டு

இது குறித்து ஊர்மக்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வருடம் தண்ணீர் வந்தால் சுத்தமாக இந்த அணை உடைந்துவிடும். பழங்கால அணையை பாதுகாக்க தவறினால் விவசாய நிலமும் பாழாகிவிடும், தண்ணீரும் வீணாகிவிடும் என்று கூறியவர்கள், இதை விரைவில் சரி செய்யவில்லை என்றால் அனைத்து கிராம மக்களும் கூடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.