டைவஸ் ஆன பிறகு நான் அப்படி இருந்தேன்?… மனம் திறந்த பிரபல நடிகை…!!!!

70s-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கரன், 1990 ஆம் வருடம் வெளியாகிய “நியாயங்கள் ஜெயிக்கட்டும்” எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஐஸ்வர்யா பாஸ்கரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அனைத்து மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் 1994 ஆம் வருடம் தன்வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சில வருடங்களில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு தன்வீர் 2வது திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா பாஸ்கரன் கூறியதாவது “என் முன்னாள் கணவர் 2வது திருமணம் செய்து கொண்டதில் எனக்கு வருத்தமில்லை. அதேபோன்று நானும் விவாகரத்து செய்த பின் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதுவும் குறுகிய காலத்திலேயே முடிந்து விட்டது” என கூறி உள்ளார்.