அப்பா.!அப்பா..! தோனியை உற்சாக படுத்திய மகள்…. வைரலாகும் வீடியோ…!!

தோனியின் ஆட்டத்தை பார்த்த அவரின் மகள் ஸிவா அப்பா அப்பா என்று கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

தோனியின் அழகு மகள் ஸிவாவுக்கு தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ரசிகர்களும்  ஸிவா_வுக்கும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம் . சில நேரங்களில் தோனி தனது மகளுடன் பேசும் , விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியாகிய அடுத்த நிமிடமே வைரலாகி விடும்.

Image result for ஸிவா

இந்நிலையில் PL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடிய போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல் அணி நிர்ணயித்த 148 ரன் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அடித்து சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் தோனி ஆடிய போது பெவிலியனில் இருந்த அவரின் மகள் ஸிவா அப்பா அப்பா என்று கூப்பிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது .