குடிமக்களே…!..உஷார்…”இனி ஜெயில் தான்” ஆப்படித்த நீதிமன்றம் …..!!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்த மணிகண்டன் என்பவர் அவருக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் குடிபோதையால் வாகனம் ஓட்டினால் ஏற்படும் தீமையையே சுட்டிக்காட்டுங்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும்.

போதையில் வாகனம்க்கான பட முடிவுகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு மட்டும்தான் பதிவு செய்யப்படுகிறது. ஏன் கைதுசெய்யப்படவில்லை. கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.குறிப்பாக ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்த உத்தரவு மூலம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஒட்டுகின்றாரா ? இல்லையா என்பதை கண்காணிக்க போதுமான அளவுக்கு மூச்சு பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும்.

போதையில் வாகனம்க்கான பட முடிவுகள்

மது போதையில் வாகனங்களை ஒட்டியது அவரின் சுவாசத்திலிருந்து அறிகுறிகள் தெரிந்தால் அந்த வாகனத்தை எடுக்க முடியாத வகையில் கருவிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை வேண்டும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுளர்கள்.குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ? எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு இருக்கிறது ?  என்ற ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதி அதிரடி காட்டினார்.