CWC-4: “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட்… யார் யாருன்னு நீங்களே பாருங்க..!!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்குகின்றது. சென்ற வாரம் பிக் பாக்ஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலாக குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள கோமாளிகள் யார் என ஏற்கனவே வெளியான ப்ரோமோ வீடியோக்களில் காட்டப்பட்டிருந்தது.

இதில் ஜிபி முத்து கோமாளியாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் தற்போது போட்டியாளர்களாக தங்களின் சமையல் திறமையை காட்ட வருபவர்களின் மொத்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ருஷ்டி டாங்கே, Andreanne Nouyrigat (வெளிநாட்டு நடிகை), ஷெரின் ,ராஜ் ஐயப்பா, சிவாங்கி, VJ விஷால், காளையன், விசித்ரா, கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Leave a Reply