சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சாதம்!!!

சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சாதம்  செய்வது எப்படி ..

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1/4  கிலோ

கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு – தேவையானஅளவு

கடுகு – சிறிதளவு

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

நெய் – தேவையான அளவு

உப்பு  – தேவையான அளவு

curry leaves க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் பச்சரிசியை  உதிரியாக வேக வைத்து கொள்ள  வேண்டும்.  ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு  கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ள  வேண்டும்.பின் மற்றொரு  கடாயில்  நெய்யை விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு , முந்திரிப் பருப்பு , கடலைப் பருப்பு  போட்டு தாளித்து , சாதத்துடன்  கலந்து கறிவேப்பிலைத்தூள், மிளகுத்தூள், உப்பு  சேர்த்து  கிளறி பரிமாறினால்  சுவையான கறிவேப்பிலை சாதம் தயார் !!!