வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும்போது…. உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரைப்பேட்டை அருகே வாகனங்களுக்கும் வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சேகருக்கு பாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சேகர் கடையில் வாகனங்களுக்கும் வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கவரைபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *