“அளவு எடுக்க சென்ற தொழிலாளி” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேனியில் நடந்த சோகம்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள குள்ளபுரத்தில் பால்பாண்டி என்பவர் வசந்து வந்துள்ளார். இவர் தேனியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் துணை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் சார்பில் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை பகுதியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு தடுப்பணை கட்டுமான அளவை அளப்பதற்காக பால்பாண்டி அலுமினிய அளவுகோல்களை எடுத்து சென்றுள்ளார். அப்போது மேலே சென்ற மின் கம்பியில் அளவுகோல் எதிர்பாராத விதமாக பட்டுள்ளது.

இதில் பால்பாண்டி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி  பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.