லைட் மாட்டிக்கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் கேரளாவை சேர்ந்த முகமது நபி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடையின் முன்புறம் உள்ள இரும்பு தூண்ணில் மின்விளக்கு கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *