“மின்சாரத்தில் கையை வைத்த வாலிபர்” சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கொடுமை…. வேலூரில் நடந்த சோகம்….!!!

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்ததில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் கார்த்தி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி பணி முடிந்தவுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அங்கிருந்த வீட்டின் அருகே ஓரமாக நிறுத்தி உள்ளார். அப்போது வீட்டின் வெளியே இருந்த பைபிள் மீது கார்த்தி கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்த போது கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *