சிலம்பத்தில் அசத்தல்…. ”சாதித்த குரும்பூர் மாணவர்கள்”….. குவியும் பாராட்டு ..!!

கோவில்பட்டியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் குரும்பூர் பகுதி மாணவர்கள் அசத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாரதியார் மற்றும் குடியரசுதின விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கோவில்பட்டி VOC அரசுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் ஏராளமான பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் திருச்செந்தூர் தாலுகா குரும்பூரின் தமிழர் வீர விளையாட்டு கலை குழு_வின் சார்பில் பயிற்சி பெற்ற நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி , பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி , அபர்ணா மேல்நிலைப்பள்ளி , ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி , ஸ்டார் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என 25 பேர் பங்கேற்று அசத்தினர்.

இதில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற 13 மாணவர்கள் கரூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். வெற்றி பெற்ற பள்ளி, மாணவர்களை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர காரணமாக இருந்த தமிழர் வீர விளையாட்டு கலை குழு_வின் மாஸ்டர்  ஸ்டிபன் அவர்களை  பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *