முன்னாள் அமைச்சர் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக கடலூரில் முன்னாள் அமைச்சர் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ராமச்சந்திரன் என்பவர் பண்ரூட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கிட்டத்தட்ட 8 பிரிவுகளின் கீழ் 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் அவரது சகோதரர் தங்கமணி மற்றும் 12 பேர் என 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு. இரண்டு பேர் நேற்றே கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு பொய் வழக்கு என  அதிமுகவினர் சார்பில் தெரிவித்து வந்த நிலையில் இன்று அதிமுகவினர் கடலூரில் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

காவல்துறையையும்,  தமிழக அரசையும் கண்டிக்கிறோம் என்று தற்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த விதமான சமாதானமும் ஏற்படாத காரணத்தால் தற்போது இந்த பகுதியில் போக்குவரத்து  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது