இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன
12 ஐ.பி.எல் திருவிழாவின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் சென்னை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்தி வருகிறது.

சென்னை அணியில் பேட்டிங்கில் சேன் வாட்ஷன், ரெய்னா, ராயுடு ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் வாட்சன் அற்புதமாக விளையாடினார். அதே போல் ரெய்னாவும் நன்றாக செயல்பட்டார். ராயுடு சற்று பழைய நிலைக்கு திரும்பினால் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். மிடில் வரிசையில் டோனியும், அசத்தி வருவதால் வலுவான நிலையில் உள்ளது. பவுலிங்கில் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரா ன் தாஹிர், பிராவோ ஆகியோர் அசத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோற்றுள்ளது. முதல் போட்டியில் பஞ்சாப் அணியுடனும், 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் அணியுடனும் தோற்றுள்ளது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க இந்த போட்டியில் வெற்றி முனைப்பில் களமிறங்க உள்ளது. பேட்டிங்கில் ஜாஸ் பட்லர், கடந்த போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டினால் சென்னை அணியை கட்டுப்படுத்த முடியும். பந்து வீச்சில் உனத் கட், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கூடுதல் சிறப்பாக செயல்பட்டால் எதிரணியை கட்டுப்படுத்த முடியும். மேலும் ஷ்ரேயஸ் கோபால் அற்புதமாக பந்து வீசி அசத்தி வருகிறார்.
இரண்டு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 12 போட்டியிலும், ராஜஸ்தான் அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கும் நடைபெற்ற 6 போட்டிகளில் ராஜஸ்தான் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாட்ரிக் வெற்றி பெற சென்னை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தான் அணியும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.