சிஎஸ்கே அணி வீரருக்கு மீண்டும் கொரோனா… அச்சத்தில் அணி நிர்வாகம்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருத்ராஜ் ஹேக்வாட்க்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிமூன்றாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19 முதல் நவம்பர் பத்தாம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது. ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னை அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வலதுகை பேட்ஸ்மேன் ருத்ராஜ் ஹேக்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் தீபக் சஹர்க்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து அவர் சக சென்னை அணி வீரர்களோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் வலதுகை பேட்ஸ்மேன் ருத்ராஜ் ஹேக்வாட் தற்போது வரை கொரோனா தொற்று குறையவில்லை என்றும், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வரும் வரை ருத்ராஜ் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர் வலைப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *