சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் போட்டியை மிகுந்த உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் 2023 சீசனில் CSK – SRH அணிகள் மோதும் போட்டி வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மற்றும் மைதானத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் விற்பனை ஏப்ரல் 18ஆம் தேதி அதாவது இன்று முதல் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை காண ஆர்வமுள்ள சிஎஸ்கே ரசிகர்கள் நாளை மிஸ் பண்ணாம டிக்கெட் வாங்கிக் கொள்ளவும். மேலும் டிக்கெட் 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.