சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் போது மெட்ரோ ரயிலில் சிஎஸ்கே ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண்பதற்கு வசதியாக ரசிகர்களுக்கு இலவச பயண சேவை அளிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதாவது சிஎஸ்கே அணி விளையாடும் நாட்களில் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் இலவசமாக பயணிக்கலாம். அதோடு இரவு போட்டி முடிந்த பிறகு கூடுதலாக 90 நிமிடங்கள் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.