அலை மோதிய மக்கள் கூட்டம்… கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் செயல்படுவதால் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் நலன் கருதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாத காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியிலுள்ள கடைவீதியில் பொது மக்கள் பொருட்களை வாங்க கூட்டம் அலை மோதி காணப்பதடத்துடன் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கடையில் பொருட்கள் வாங்கி சென்றுள்ளனர். இதுக்குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *