அச்சச்சோ…! என்ன ஆச்சு….? கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர். முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஸ்ரேயஸ் ஐயருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலியின் காரணமாக இறுதி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யவில்லை.

அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மும்பையைச் சேர்ந்த டாக்டர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஸ்ரேயஸ் ஐயர் ஆப்ரேஷன் செய்து கொண்டால் அவரால் அடுத்த 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. மேலும் பிசிசிஐ வழிகாட்டுதலின்படி லண்டன் அல்லது இந்தியாவில் ஸ்ரேயஸ் ஐயர் அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.