கிரிக்கெட் வீரர் ரஹானே வீடியோ மூலம் சுதந்திர தின வாழ்த்து..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  

இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். இந்த சுதந்திரதின நன்னாளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Image result for Rahane

சுதந்திர தின விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவர்க்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.