அழகிய மண்டபம் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் ஆழ்துளை வாகனம் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த மாணவர் சேதுபதி, கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். அவரும் அதே பகுதியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் சுதிஷ் என்பவரும், இரு சக்கர வாகனத்தில் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளனர். அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய இருவரும் தக்கலை பகுதியில் ஆழ்துளை வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி இருவரும் தூக்கி அடிக்கப் பட்டனர். இதனால் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஆழ்துளை வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எந்த ஒரு எச்சரிக்கை விளக்குகளும் ஒளிர படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆள்துளை வாகன ஓட்டுனர் சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.