விவசாயிகளுக்கான க்ரெயின்ஸ் செயலி… அரசு அலுவலர்களுக்கு பயிற்சி…!!!!!

வேளாண் தோட்டக்கலை, கூட்டுறவு, வருவாய், வேளாண் பொறியியல் உட்பட 13 க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பலன்களை விவசாயிகள் எளிதில் பெரும் விதமாக க்ரெயின்ஸ் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா நிர்வாக மேலாண்மை பயிற்சி நிலையத்தில் மே 22-ஆம் தேதி இந்த செயலியை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சி சமய மூர்த்தி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குனர் பிரவீன் நாயர், நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த பயிற்சியில் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசி உள்ளனர்.

இந்த பயிற்சியில் 35 மாவட்டங்களில் இருந்து வருவாய்த்துறை, வேளாண்துறை, மாவட்ட இ சேவை சார்ந்த 114 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பயிற்சி பெற்ற 114 அலுவலர்கள் மாவட்ட அளவில் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிப்பார்கள். மேலும் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வேளாண் இயக்கக வேளாண் துணை இயக்குனர் பெ. வெங்கடாசலபதி இந்த செயலை பயன்படுத்தும் முறை குறித்து திட்ட இயக்குனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர்.