“மறுபடி உங்க கிட்ட கொடுக்க மாட்டோம்” சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!!

பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படாது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலை நகரில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும் நகராட்சியை ஒட்டி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. அதோடு இந்தப் பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியின் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே மாட்டின் உரிமையாளர் தங்களுடைய மாடுகளை பொது இடங்களில் விடக்கூடாது என்றும், தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதையும் மீறி தெருக்கள் மற்றும் பொது இடங்களில் மாடுகள் சுற்றித் திரிந்தால் நிர்வாகம் மூலம் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படுவதோடு, அருகிலுள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்ட மாடுகள் உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *