“என்னோட மாட்டை காணும்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

மாடுகளை திருடி சென்று விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஞ்சப்பள்ளி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டிலிருந்த மாட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் மாட்டுச்சந்தையில் பெருமாளுக்கு சொந்தமான மாட்டை சிலர் விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் திருப்பதி மற்றும் 17, 15 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *